முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

Quick & Traditional Rasam Recipes in Tamil – 7 Types: Urundai, Pachai, Pesaru, Mango Ginger, Tomato, Amla & Kandathippili""7 சிறந்த ரசம் வகைகள் – உருண்டை, பச்சை, பெசரு, மாங்கா இஞ்சி, தக்காளி, நெல்லிக்காய், கண்டந்திப்பிலி ரெசிப்பிகள்

 உருண்டை ரசம்


தேவை: கடலைப்பருப்பு -அரை கப், துவரம்பருப்பு - கால் கப், உப்பு, எண்ணெய் தேவைக்கு, காய்ந்தமிளகாய் - 3, சோம்பு, சீரகம், மிளகு, தனியா - தலா கால் டீஸ்பூன், புனி கரைசல் - 1½ கப், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 சிட்டிகை, மல்லித்தழை அறிந்தது. சிறிது.


தாளிக்க: கடுகு - உடைத்த உளுந்து - தலா அரை டீஸ்பூன்,


செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து


எடுத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும், மிளகு, சீரகம், தனியா, சேர்த்து எண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசல் உப்பு, வறுத்த பொடி சேர்த்து பச்சைவாடை போகும் வரை கொதிக்க விட்டு, பிடித்து வைத்துள்ள உருண்டையைப்போட்டு மல்லித்தழை தூவி உடனே இறக்கவும். உருண்டை செய்வதற்கு பதில் வெங்காய பக்கோடா உதிர்த்துப் போட்டும் செய்யலாம். அசைவப் பிரியர்களும் இந்த ரசத்தை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.


பச்சை ரசம் [குவிக் ரசம்]


தேவை: நீர்த்த புளிக்கரைசல் - 11/2 கப், தக்காளி அரிந்தது - 1 டேபிள் ஸ்பூன், நெய், கடுகு, சீரகம் - அரை டீஸ்பூன், தாளிக்க பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 1 ஸ்பூன், வெல்லத்துருவல் 1 டீஸ்பூன்


செய்முறை: இவ்வகை ரசம் வேக வைக்காத ரசம் ஆகும். 5 நிமிடத்தில் சுலபமாகவும் செய்து விடலாம். கொதிக்க வைக்கவும் வேண்டாம். புளிக்கரைசலுடன் உப்பு, வெல்லத்துருவல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மிளகாய் விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் சிறிது நெய்விட்டு கடுகு, சீரகம் மட்டும் தாளித்து பச்சை ரசத்தில் கொட்டவும், பரிமாறவும்.


பெசரு கட்டு


தேவை: மாங்கா இஞ்சி - 2 அங்குலத்துண்டு, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பச்சைமிளகாய் 2 (கீறினது), உப்பு, எண்ணெய் - ருசிக்கு / தாளிக்க, பருப்பு நீர் - 1 நீர், மிளகு, சீரகப்பொடி -1 டீஸ்பூன், மாங்கா இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், மல்லித்தழை- சிறிது, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, எலுமிச்சம்பழச்சாறு - அரை மூடி.


செய்முறை: மாங்கா இஞ்சி சில சீசனில் கிடைக்கும். அப்பொழுது செய்து சுவைக்கலாம். சுவையும் சத்தும் அதிகம். மாங்கா இஞ்சியை தோல் சீவி அரிந்து மிக்சியில் நீர் விட்டு மைய அரைத்துக் கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.


வடிகட்டிய மாங்கா இஞ்சி சாற்றை அப்படியே வைத்திருந்தால் (10-15 நிமிடம்) கீழே சுண்ணாம்பு போல் வண்டல் படிந்து விடும். மேலே இருக்கும் தெளிவான சாறைப் பயன்படுத்தலாம். புளிப்புத்தன்மை உடையதால் புளி தேவையில்லை இந்த ரசத்திற்கு. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறின பச்சைமிளகாய், மாங்கா இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து பருப்புநீர் சேர்த்து 1 கப் நீர்த்த இஞ்சிச்சாறு சேர்த்து மஞ்சள்தூள், மிளகு, சீரகப்பொடி தூவி, மல்லித்தழை போட்டு 1 கொதி வந்ததும் நிறுத்தவும். சூட்டில் எலுமிச்சைச்சாறு பிழிந்து மூடவும்


மாங்கா இஞ்சி ரசம்




தேவை: பயத்தம் பருப்பு -


அரை கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, இஞ்சித்துருவல் 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - ருசிக்கு, சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சிவப்பு மிளகாய் - 3.


செய்முறை: பயத்தம் பருப்பு தேவையான நீரில் வேகவிட்டு மசித்து இஞ்சித்துருவல் மஞ் சள்தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சிவப்பு மிளகாய், சீரகம், வறுத்து மசித்த பருப்பு நீரைக் கொட்டவும். கொதிக்க விடவும். நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தூவி இறக்கி மூடி, சாதத்துடன் சூடாக பரிமாறவும்.


இது வட ஆந்திராவில் செய்யப்படும் முறை. ரசம் போன்று மிகத் தண்ணீராக இல்லாமல் குழம்பு போல் கெட்டியாக இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.


குறிப்பு : பாசிப்பருப்புக்குப் பதில் முழு உளுந்தம் பருப்பை பயன்படுத்தி செய்யலாம். மினப்பருப்பு கட்டு எனச் சொல்லுவார்கள்.


தக்காளி ரசம்


தேவை: நன்கு பழுத்த தக்காளி


கால் கிலோ, நெய் - சிறிது, உப்பு, வெல்லம் தேவையான அளவு, பச்சைமிளகாய் - 3, பூண்டு பல் - 2, பட்டை - கால் அங்குலத்துண்டு, கிராம்ப - 1. தனியா - 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) - 6, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, சோம்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - சிறிதும


செய்முறை: தக்காளி புளிப்புத்தன்மை உடையது. இவ்வகை ரசத்திற்கு புளி, மிளகு, சீரகம் தேவை இல்லை.


தக்காளி மூழ் மூழ்கும் அளவு நீர்விட்டு மேல்தோல் மென்மையாகும் வரை கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி தக்காளி தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து ரத்து விதை நீக்கி வடி கட்டவும். தேவையெனில் நீர் சேர்த்துக் கொள்ளலாம். கடாயில் நெய்விட்டு சூடான தும் கிராம்பு, பட்டை, சோம்பு, பூண்டு, தனியா சேர்த்து வதக்கி பொடித்துக்கொள்ளவும். இதை தக்காளிச்சாறுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தையும் போடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய் கீறினது. வெங்காயம் வதக்கி, தக்காளி, மசாலா சாற்றை ஊற்றி 2, 3 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். கறிவேப்பிலை மல்லித்தழை தூவி இறக்கவும். இறக்கி வைத்து பெருங்காயத்தை நெய்யில் வறுத்து தக்காளி ரசத்தில் போடவும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தக்காளி ரசம் செய்முறை மாறுபடும் ஆனால் ருசி அபாரம்.


குறிப்பு: உணவிற்கு முன் கூட இந்த ரசத்தை அருந்தலாம். அப்பொழுது நன்றாக வடிகட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து சூடாக பருகவும். டொமோட்டோ ப்யூரி ரெடிமேடாகக் கூட டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கிறது. தக்காளி பழத்திற்கு பதில் இதைப் பயன்படுத்தியும் இம்முறை ரசம் செய்யலாம்.


நெல்லிக்காய் ரசம்


தேவை: பெரிய நெல்லிக்காய் - 4, பருப்பு ரசப்பொடி - 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கு, மஞ் சள்தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது, எண்ணெய் நெய் - சிறிது, கடுகு -அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய்வற்றல் - 2.


செய்முறை: 3 நெல்லிக்காயை ஆவியில் வேக விட்டு கொட்டை நீக்கி மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய் வற்றல் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து, ஒரு நெல்லிக்காயை துருவிப் போட்டு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் வெந்த மசித்ததைப் போட்டு தேவையான நீர் சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, ரசப்பொடிப் போட்டு 1 கொதி வந்ததும் நிறுத்தவும் மல்லித்தழை சூட்டுடன் தூவி மூடவும்.


குறிப்பு: சரும நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் நல்லது. ஞாபக சக்தியும் அதிகரிக்கும். அரை நெல்லிக்காயிலும் இந்த வகை ரசம் செய்யலாம்..


ரசப்பொடி அப்பொழுது ஃப்ரெஷ் ஆக செய்து கொண்டால் எல்லா வகை ரசமும் மணமும் சுவையும் அதிகரிக்கும்.


நெல்லிக்காய்க்குப் பதில் மாங்காய் துருவிப்போட்டு செய்யலாம்.


கண்டந்திப்பிலி ரசம்


தேவை: கண்டந்திப்பிலி - 2 துண்டுகள், மிளகு 1 டீஸ்பூன், (நாட்டு மருந்துக் கடைக கிடைக்கும்) உப்பு - சிறிது, எண்ணெய் - தேவைக்கு, புளி - எலுமிச்சை அளவு, துவரம்பருப்பு -டேபிள் ஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன்,'


தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - சிறிது, நெய் - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன்


செய்முறை: சளி இருமலைப் போக்கும் கண்டந்திப்பிலி ரச செய்முறையை இனி பார்க்கலாம். கடாயில் நெய் விட்டு சூடானதும் கண்டந்திப்பிலி குச்சி, மிளகு, தனியா, துவாம் பருப்பு சேர்த்து வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் + நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியதை (சீரகம் தவிர) தாளித்து புளிக்கரைசல் ஊற்றி உப்பு, சேர்த்து பொடித்து கண்டந்திப்பிலி சாலா பொடி சேர்த்து நுரை கூடி வந்ததும் ரசத்தை இறக்கி நெய்யில் வறுத்த சீரகத்தை அதில் கொட்டி, மூடி சாப்பிடும் போது பரிமாறவும்

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...