முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

மொறுமொறுப்பான சுவையான மைசூர் பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...

மிக்ஸட் வெஜிடபிள்குருமா&சென்னா குருமா

  மிக்ஸட் வெஜிடபிள்குருமா

 தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், சுத்தம் செய்த காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி தலா கால் கப், வதக்க: எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி, பெரிய வெங்காயம் தலா ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. வெறும் வாணலியில் வறுக்க: பட்டை ஒரு சிறிய துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 3, கசகசா - ஒரு டீஸ்பூன், பொடி வகைகள்: சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன், தனியா பவுடர் ஒரு டீஸ்பூன், அரைக்க: பச்சைமிளகாய்3.தேங்காய்த்துருவல் கால் கப், முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 ஸ்பூன்.


செய்முறை: ஒரு பாத்திரத்தில் அளவான நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். வெறும் வாணலியில் வறுப்பதற்குக் கொடுத்தவற்றை வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் சில்லி பவுடர், தனியா பவுடரை சேர்த்து வதக்கி, வெந்த காய்களை நீருடன் சேர்த்து, வாணலியில் வறுத்து வைத்தவற்றை மிக்ஸியில் இரண்டு சுற்று விட்டு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றவும். இரண்டு கொதிவிட்டு மல்லித்தழைத் தூவி இறக்கவும். 


குறிப்பு: சப்பாத்தி / பரோட்டாவுடன் தொட்டுச் சாப்பிட ஏற்ற குருமா இது 


சென்னா குருமா


தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு டீஸ்பூன். வேக வைக்கும்போது சேர்க்க: ஒரு சிறிய மெல்லிய துணி - ஒரு ஜான் அளவு, கிராம்பு, ஏலக்காய் தலா 2, பிரிஞ்சி இலை - சிறியது, லவங்கபட்டை


சிறிய துண்டு, டீத்தூள் - 2 டீஸ்பூன், மசாலா பவுடர்கள்: கசூரி மேத்தி - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகப்பவுடர் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், தனியா பவுடர் ஒரு டீஸ்பூன், சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன். அரைக்க: தக்காளி - 2, பெரிய வெங்காயம்


ஒன்று. தாளிக்க: எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு - தலா ஒரு டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, சில்லி பவுடர் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள். 


 செய்முறை: கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, வேக வைக்கும்போது சேர்க்க வேண்டிய பொருட்களை ஒரு வெள்ளைத்துணியில் வைத்து முட்டையாகக் கட்டி, குக்கரில் போட்டு 3 விசில் வந்ததும் இறக்கி, மூட்டையை எடுத்து விடவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயம் இரண்டையும் வதக்கி, நீர் விட்டு கெட்டியாக அரைத்து, வாணலியில் போட்டு வதக்கவும். பின்னர் பெருங்காயம், சில்லி பவுடர், தனியா பவுடர், சீரகப்பவுடர், கரம் மசாலா, கசூரி மேத்தி சேர்த்து வதக்கி, வெந்த கொண்டைக்கடலையை நீருடன் சேர்த்து, வதக்கிய கலவையுடன் சேர்த்து இரண்டு மூன்று கொதிவிட்டு, கரண்டியால் லேசாக மசித்துவிடவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளித்து


இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது.!

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...