டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க. சீரகம். கருவேப்பிலை. கடுகு .2 வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள் எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்
கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும். தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...
கருத்துகள்
கருத்துரையிடுக