மைதா மாவு ஒரு கப். நாலு ஸ்பூன் ரவா பவுடர். அரை டீஸ்பூன் ஈஸ்ட் 100 கிராம் தண்ணீரில் ஊற வையுங்க. கரைந்ததும். அந்த ஈஸ்ட் எடுத்து மைதா மாவுடன் சேர்த்து. உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து .மைதா மாவை பரோட்டா போடும் பதத்திற்கு பிசைந்து. 5 நிமிஷம் ஊற வையுங்க. பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து பரோட்டா செய்து வையுங்க .லேயர் லேயராக வரலைன்னா நீங்க கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை .அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விடுங்க நம்ம செய்து வைத்திருக்க பரோட்டாவை. அந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு அடிக்கி வச்சிருங்க. ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க அதுல சோம்பு பட்டை 1 குடை மிளகாயை கீரி போடுங்க.மூன்று பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போடுங்கள் 2 ஸ்பூன் சில்லி சாஸ் .2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள். கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் .சிறிதளவு உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. பிறகு பரோட்டாவை எடுத்து கையால் உடைச்சு மசாலாவுடன் கலந்து 10 நிமிடம் மூடி வையுங்கள்.பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கமகம .சில்லி பரோட்டா ரெடி. ஒரு பிளேட் எடுத்து வச்சு. அது மேலே வெங்காயம். எலுமிச்சம் பழம் சேர்த்து பரிமாறவும்.
Kalaireal360.xyz - Now in a new dimension! Now with Tamil & Hindi lessons along with cooking / https://www.kalaireal360.xyz/p/contact-us_26.html
கருத்துகள்
கருத்துரையிடுக