முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

வட இந்திய உணவுகள்:🔥 சுவையான சாட், பாவ் பாஜி & இனிப்பு வகைகள்! மிஸ் பண்ணக் கூடாத 15 ரோட்டுக் கடை ஸ்பெஷல்கள்.

 *


ஸ்வீட்கார்ன் தோசா .  


நான்கு கப் தோசை மாவு, வேக வைத்த ஸ்வீட் கார்ன் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, லேசாக தண்ணீர் தெளித்து துணியால் துடைத்து, ஒரு கரண்டி மாவை ஊற்றவும். டபராவின் அடிப்பகுதியால், கல் முழுவதும் தேய்த்து, முதலில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யை போட்டு, அதன் மேலாக இட்லி மிளகாய்த்தூளை 2 ஸ்பூன் அளவு போட்டு, தோசை திருப்பியால் தோசை முழுவதும் பரப்பவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிதளவு தூவி, அதற்கும் மேலே வேக வைத்த ஸ்வீட் கார்ன் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை சிறிதளவு போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.


பெங்களூருவில் உள்ள முக்கியமான அனைத்து வீதிகளிலும்


கோவிந்த தோசா


நான்கு கப் தோசை மாவை எடுத்துக் கொள்ளவும். காய்ந்த தோசைக் கல்லில் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும். மேலாக 2 ஸ்பூன் காரச்சட்னியை தடவவும். அதற்கு மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யை போட்டு, தோசை திருப்பியால் தோசை முழுதும் பரப்பவும். பின்னர் உருளைக்கிழங்கு மசாலாவை 5 ஸ்பூன் வைத்துப் பரத்தி, அதன் மேலே நறுக்கிய குடைமிளகாயை ஒரு டீஸ்பூன் அளவு பரப்பி, அதற்கு மேலே 2 டீஸ்பூன் அளவு இட்லிப் பொடியை தூவவும். பின்னர் நறுக்கிய கொத்துமல்லித்தழையை சிறிதளவு தூவி, தோசையை மடக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.


சப்போட்டா ஜூஸ்


மூன்று சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் விதை நீக்கிய பேரீச்சம்பழம் மூன்றை நறுக்கிப் போட்டு ஒரு சுற்று விட்டு, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், 6 டேபிள் ஸ்பூன் துருவிய வெல்லம், ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் ஒரு சுற்று விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து வடிகட்டவும். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து, பெரிய குவளைகளில் ஊற்றி பரிமாறவும்.


உப்புமா பெசரட்டு


வழக்கமான முறையில் 'ரவை உப்புமா' செய்து கொள்ளவும். ஒரு கப் முழுபயறு, 4 டேபிள் ஸ்பூன் பச்சரிசி இரண்டையும் 3 மணி நேரம் ஊற வைத்து, சிறிதளவு உப்பு, 2 பச்சைமிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி தலா ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். இந்த மாவை சூடான தோசைக்கல்லில் ஒரு கரண்டி அளவு தோசையாக ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிதளவு தூவவும். அதற்கு மேலே இட்லி மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் தூவி, அதன் மீது ஒரு கரண்டி அளவு ரவை உப்புமாவை வைத்து, தோசை திருப்பியால் பரவலாகத் தேய்க்கவும். சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் மடித்து எடுக்கவும்.


பாவ் பாஜி



இரண்டு உருளைக்கிழங்கு, ஆய்ந்த காலிஃபிளவர், பச்சைப் பட்டாணி தலா கால் கப், இவை மூன்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வெங்காயம், இரண்டு தக்காளி, பாதியளவு குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை வதக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் பாவ் பாஜி மசாலா, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கசூரி மேத்தி, காஷ்மீரி மிளகாய்த்தூள் தலா 2 டேபிள் ஸ்பூன், கறுப்பு உப்பு சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்து மல்லித்தழையை தூவவும். ஒரு 'பாவ் பன்'னின் நடுவில் சிறிதளவு வெண்ணெய் தடவி, 3 டேபிள் ஸ்பூன் அளவு மசாலாவை வைத்து மூடவும். இதை சூடான தவாவில் போட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்.


பானி பூரி


புதினா, கொத்துமல்லித்தழை தலா கால் கப், அரை டீஸ்பூன் சீரகம், துருவிய வெல்லம், கறுப்பு உப்பு தலா ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு, 3 பச்சைமிளகாய், நெல்லிக்காயளவு புளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் 'பானி' தயார். பெரிய நெல்லிக்காயளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து, விதை நீக்கிய 5 பேரீச்சை, ஒரு டீஸ்பூன் உலர்ந்த திராட்சை, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கினால் 'இனிப்பு சட்னி' தயார். உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, வேக வைத்து தோல் நீக்கி, உப்பு, மிளகாய்த்தூள் தூவவும். மினி பூரிக்களின் மீது சிறிய துளையிட்டு, அதற்கள் உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிதளவு போடவும். அதன் மேல் இனிப்பு சட்னியை கொஞ்சம் விட்டு, பானியை ஊற்றி, உடனே பரிமாறவும்.


பேல்பூரி


அகலமான பாத்திரத்தில், ஒரு கப் அளவுள்ள மினி பூரிகளை நொறுக்கிப் போடவும், அதனுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ், ஓமப்பொடி தலா அரை கப், 2 கப் பொரி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், மாங்காய்த்துருவல், வெள்ளரிக்காய் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளி, இனிப்பு சட்னி, புதினா சட்னி தலா ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பொடி, சிறிதளவு கொத்துமல்லித்தழை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, நன்றாக கலந்து உடனே பரிமாறவும்.


மட்டர் ஆலு சாட்


ஒரு கப் கொண்டைக்கடலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும், 2 உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். 2 தக்காளி, 3 பச்சைமிளகாய், 2 பல் பூண்டு ஆகியவற்றை நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் பெருங்காயம், அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த கொண்டைக்கடலை, மசித்த உருளை, உப்பு சேர்த்து, ஒரு கப் தன்ணீர் விட்டு மூடி, நன்றாக வெந்ததும் இறக்கவும். இதன் மேலாக சிறிதளவு சீரகத்தூள், இனிப்பு சட்னி, கார சட்னி, தயிர் தலா கால் கப், வெள்ளரிக்காய் துருவல் அரை கப், கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம் தலா கால் கப், 4 டேபிள் ஸ்பூன் தக்காளி கெட்சப், கால் கப்


ஓமப்பொடி, ஒன்றிரண்டாகத் தூளாக்கிய தட்டை, நான்கு தயிர் வடையை வைக்கவும். பின்னர் கறுப்பு உப்பு, ஒரு டீஸ்பூன், 3 டேபிள் ஸ்பூன் கொத்து மல்லித்தழையை தூவி, ஒரு டீஸ்பூன் சாட் மசாலா சேர்த்து பரிமாறவும்


கச்சோரி


சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மாவு நன்றாக இளகும் வரை ஒரு கப் மைதா மாவுடன், சிறிதளவு உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் பிசைந்து, ஈரத்துணியால் மூடவும். கால் கப் உளுந்து, 6 டேபிள் பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக அரை மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் உளுந்தை பாதியளவு வேகவைத்து, பின்னர் பயத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பச்சைமிளகாய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கி, 2 டீஸ்பூன் தனியாத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த பருப்புகளை சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவைச் சேர்த்து கிளறி இறக்கி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லித்தழை சேர்த்தால், 'ஸ்டஃபிங்' தயார். இதை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சிறிய பூரி போல திரட்டி, அதனுள் ஸ்டஃபிங் உருண்டையை வைத்து மூடி, வட்டமாக தட்டவும். இதை நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்து சாஸ் உடன் பரிமாறவும்


கட்லெட்


200 கிராம் உருளைக்கிழங்கை தோல் சீவி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஊற வைத்த கால் கப் பச்சைப்பட்டாணி சேர்த்து வேக விடவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் துண்டுகள், 6 டேபிள் ஸ்பூன் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளை பட்டாணி கலவையை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும். ஒரு கப் சோளமாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். நீள வாக்கில் உருட்டியவற்றை சோள மாவுக் கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளியில் புரட்டி, ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பின்னர் எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சாஸுவுடன் பரிமாறவும்.


லட்டு


அரை கப் கடலைப்பருப்பு, ஒரு பயத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவு உப்பு, 3 பச்சைமிளகாய் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த மாவுடன் பெருங்காயம், சீரகம் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவுக்கலவையை சிறிய போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுத்து எண்ணெயை வடிக்கவும். பின்னர் இவற்றை ஒரு தட்டில் பரப்பி, அதன் மேல், முள்ளங்கித்துருவல், காரச்சட்னி, கேரட் துருவல், இனிப்புச்சட்னி என தலா 5 டேபிள் ஸ்பூன் மாற்றி மாற்றி தூவி, 3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லித்தழையை மேலாக அலங்கரித்து, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும்.'


குலோப் ஜாமூன்


அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும். பால் சுண்டி வந்ததும் இறக்கி, 50 கிராம் மைதா மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 300 கிராம் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். பொரித்து வைத்துள்ள ஜாமூன்களை பாகில் போட்டு, நன்றாக ஊறியதும் பரிமாறவும்.


சாண்ட்விச்


வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு


பொடியாக நறுக்கிய வெங்காயம் 8 டேபிள் ஸ்பூன்,


நறுக்கிய முட்டைக்கோஸ் கால் கப், பொடியாக


நறுக்கிய தக்காளி 2. டேபிள் ஸ்பூன் சேர்த்து


வதக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன்


மஞ்சள் தூள், 3 டேபிள் ஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து


வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழையை 2 டேபிள் ஸ்பூன் தூவி இறக்கவும். சூரு பிரெட் துண்டின் மீது லேசாக வெண்ணெய் தடவி, வதக்கி வைத்துள்ள மசாலாவை 3 டேபிள் ஸ்பூன் அளவு வைத்து, அதன் மேலே மற்றொரு பிரெட்டை வைத்து மூடவும். பின்னர் அதை சூடான தவாவில் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.


பர்கர்


பன்னை இரண்டாக வெட்டி, மேலே ஒரு ஸ்பூன் வெண்ணெயை தடவவும். அதன் மீது வட்டமாக நறுக்கிய வெங்காய வில்லை, ஒரு தக்காளி வில்லை, ஒரு குடைமிளகாய் வில்லை, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டு ஒன்றை வைக்கவும். பின்னர் அதன் மீது சிறிதளவு மிளகுத்தூளை தூவி, அதன் மீது ஒரு கேரட் வில்லையை வைத்து, சிறிதளவு கொத்துமல்லித்தழையை தூவவும். பின்னர் வெட்டிய பன்னின் இன்னொரு பாதியை வைத்து மூடவும். மேலாக வறுத்த வெள்ளை எள்ளை சிறிதளவு தூவி, டூத்பிக்கை செருகவும். அதன் மேல் ஒரு செர்ரி பழத்தை வைத்து பரிமாறவும்.


ஆலு டிக்கி சாட்


250 கிராம் உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து துருவவும். 2 பச்சைமிளகாய் துண்டுகள், சோள மாவு, ரஸ்க் தூள் தலா டேபிள் ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து, சிறியதாக உருட்டி, வட்டமாக தட்டி, எண்ணெய் தடவிய தவாவில் போடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும். இதை ஒரு தட்டில் பரப்பி, மேலாக அரை கப் தயிர், புளி சட்னி, பச்சை சட்னி தலா 3 டேபிள் ஸ்பூன் விடவும். பின்னர் சீரகத்தூள், காலா நமக் அரிசி தலா ஒரு டீஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 10 டேபிள் ஸ்பூன் ஓமப்பொடியை தூவி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை


2 டேபிள் ஸ்பூன் அளவு தூவி பரிமாறவும்.



 அடுத்து   வருவது வத்தல் குழம்பு வகைகள் 

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...