முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

சமையல்குறிப்பு

Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/kalaireal360- Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/samayal-recipe-e-book

17 கிராமத்து சமையல் குறிப்புகள் PDF | Kalaireal360 Village Samayal Recipes

கிராமத்து சமையல்
1.உளுந்து-துவரம்பருப்பு வடை தேவையானவை: வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 கப், துவரம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - அரை கப், தனியா -2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, காய்ந்தமிளகாய் - 3, கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். இதனுடன் தனியா, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லித்தழை சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவைத்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
2 .தக்காளி & பருப்பு ரசம் தக்காளி தேவையானவை: குழைய வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - 3, ரசப்பொடி - 2 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கட்டிப்பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, மஞ்சள்தூள், வெல்லம் - தலா சிறிதளவு, உப்பு தேவையான அளவு. 2. தாளிக்க: கடுகு, சீரகம், நெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் செய்முறை: புளியை கரைத்து, பொடியாக நறுக்கிய தக்காளி, வெல்லம், பெருங்காயம், ரசப்பொடி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து பச்சைவாசனை போகும் வரை சுண்ட கொதிக்க விடவும். வேகவைத்த துவரம் பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கும் கலவையில் ஊற்றவும். கலவை நன்றாக நுரைத்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம், கிள்ளிய காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி, கொத்துமல்லித்தழைத் தூவி கலந்து பரிமாறவும்.
3 தக்காளி கூட்டு தேவையானவை: நாட்டு தக்காளி - 2, தேங்காய்த்துருவல் - கால் கப், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, வெல்லம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு -ஒரு டீஸ்பூன், உளுந்தம்பருப்பு -2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த்துருவல், கடுகு, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டுடன் சேர்த்து கலந்து, சூடான சாதத்துடன் பரிமாறவும் இட்லி, சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசைக்கு தொட்டுக் கொள்ள நல்ல சைட்-டிஷ் இது.
4 அரிசி உப்புமா தேவையானவை: பச்சரிசி - 1 கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் சிறிதளவு, நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி, உப்பு தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியை ரவை போல உடைத்து பெரிய கண்ணுள்ள சல்லடையில் சலித்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், கிள்ளிய காய்ந்தமிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அரிசி ரவையைச் சேர்த்து கிளறவும். பாதியளவு வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி, சூடாக பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் நன்றாக இருக்கும்.
5 மரவள்ளி கூட்டு தேவையானவை: தோல் நீக்கி பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு - கால் கப், தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் -2, பூண்டு - 3 பல், கடுகு - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உளுந்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கிள்ளிய காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த்துருவல், பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். மரவள்ளிக்கிழங்குடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டுடன் சேர்க்கவும். சூடான் சாதத்துடன் இந்த கூட்டை சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
6 அரிசி-பருப்பு கலவை சாதம் தேவையானவை: புழுங்கலரிசி 1 கப், துவரம்பருப்பு கால் கப், அவரைப்பருப்பு - 10, நெய், எண்ணெய் - தலா 1 கரண்டி, கடுகு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் கால் கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு தேவையான அளவு. அரைக்க: பூண்டு 5 பல், தனியா 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் -4, சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு. செய்முறை: புழுங்கலரிசி, துவரம்பருப்பு, அவரைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக அரைமணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும். இந்த கலவையை ஊறவைத்து தனியாக வைத்துள்ள அரிசி-துவரம்பருப்பு-அவரைப்பருப்புடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக கலந்து, குக்கருக்கு மாற்றி 4 விசில் வரும் வரை வேகவைத்து ஆறவைத்து. உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் உதிர்த்து வைத்த சாதம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சுட்ட அப்பளத்துடன் சூடாக பரிமாறவும்.
7. கோதுமை ரவை தோசை Just For You தேவையானவை: கோதுமை ரவை முக்கால் கப், பச்சரிசி (அ) இட்லி புழுங்கலரிசி - 1 கப், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் -அரை கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - கால் கப், தனியா - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம், கறிவேப்பிலை தலா சிறிதளவு, உப்பு -தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கோதுமை ரவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். பின்னர் அதனுடன் தனியா, காய்ந்தமிளகாய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்துமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து இந்த மாவை, சூடான தவாவில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் பரவலாக எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். தோசை ஒரு பக்கம் மொறுமொறுப்பாக வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து, வெங்காய சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
8 இஞ்சி புளி .இஞ்சி புளி தேவையானவை தோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, கெட்டியான புளிக்கரைசல் - தலா கால் கப், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் - தலா 3, நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், வெல்லம் - சிறிதளவு, உப்பு தேவையான அளவு. வறுத்து பொடிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன். லைப்பருப்பை செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயம், கடுகு, போட்டு சிவக்க வறுத்து பொடிக்கவும். நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாயை மிக்ஸியில் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும். இதில் இஞ்சி விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும். எண்ணெய் மேலே மிதந்து, கிரேவி பதம் வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கவும். சூடான சாதத்தில் இந்த இஞ்சி புளியை சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். மோர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். இது சீக்கிரம் கெடாது.
9 வெந்தய இட்லி தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 1 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், தோசை மாவு - ஒரு கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக மூன்று மணிநேரம் ஊற விடவும். பின்னர் களைந்து கிரைண்டரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். பின்னர் உப்பு, தோசைமாவு சேர்த்து ஒரு சுற்றுவிட்டு அரைத்து எடுக்கவும். இந்த மாவை மறுநாள் காலையில், இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதற்கு வேர்க்கடலை சட்னி (அ) கொள்ளு சட்னி நல்ல காம்பினேஷன்."
10 கம்பு சாதம் தேவையானவை: தோல் நீக்கிய காட்டு கம்பு (சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்) - 1 கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான குக்கரில் நான்கு கப் தண்ணீர் விட்டு, கம்பைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். பின்னர் அடுப்பின் தீயை மிதமாக வைத்து கம்பு குழைய வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சாதம் சூடாக இருக்கும்போதே கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின்னர் ஆறவைத்து ஆரஞ்சுப் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த கம்பு சாதத்துடன் வெண்டைக்காய் குழம்பு, ரசம், தயிர், மோர் என எதுவேண்டுமானாலும் ஊற்றி சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
11.கல்கண்டு சாதம் தேவையானவை: பச்சரிசி - 1 கப், கல்கண்டு 2 கப், நெய் அரை கப், முந்திரிப்பருப்பு, காய்ந்ததிராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை செய்முறை: கற்கண்டை பொடித்துக் கொள்ளவும். பச்சரிசியைக் கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 6 விசில் வரும் வரை குழைய வேகவைத்து இறக்கவும். சாதம் சூடாக இருக்கும்போதே கரண்டியால் மசிக்கவும். அகலமான பாத்திரம் ஒன்றில் பொடித்த கற்கண்டை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைக்கவும். கற்கண்டு நன்றாக கரைந்து பாகு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த பாகை சாதத்தில் ஊற்றி கிளறவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து சாதத்தில் சேர்க்கவும். பின்னர் ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும்.
12பாகற்காய் தொக்கு தேவையானவை: பெரியசைஸ்பாகற்காய் - 1, பச்சைமிளகாய் 2, காய்ந்தமிளகாய் - 3, சாம்பார்வெங்காயம், நல்லெண்ணெய் - தலா கால் கப், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கட்டி பெருங்காயம், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி நெல்லிக்காயளவு, உப்பு -தேவையான அளவு. செய்முறை: பாகற்காயை கழுவி பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். சாம்பார் வெங்காயம், தனியா, சீரகம், காய்ந்தமிளகாய், பெருங்காயம், உப்பு, புளி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் பாகற்காய் விழுது, வெங்காய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் சுண்டியதும் வெல்லம் சேர்த்து மறுபடியும் சிறிதளவு நல்லெண்ணெய் விடவும். தண்ணீர் நன்றாக சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த தொக்கை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். மோர் சாதம் மற்றும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். இது சீக்கிரம் கெடாது என்பதால் வெளியூர் பயணங்களின் போது கொண்டு செல்ல ஏற்றது.
14 ராகி களி தேவையானவை: ராகி மாவு - 1 கப், மஞ்சள்பூசணி, வெள்ளைபூசணி, கத்தரிக்காய், கொத்தவரங்காய், கேரட், சுரைக்காய் (அனைத்தும் பொடியாக நறுக்கிய கலவை) - கால் கப், பச்சைமிளகாய் 2. உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான பாத்திரம் ஒன்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, சிறிதளவு உப்பு போட்டு பாதியளவு வேகவிடவும். சிறிதளவு தண்ணீரில் ராகி மாவை கரைத்து இதில் ஊற்றிக் கிளறவும். ராகி மாவு வேக தண்ணீர் போதவில்லை என்றால் வெந்நீர் சிறிதளவு ஊற்றலாம். கலவை நன்றாக வெந்து கையில் ஒட்டாமல் வரும் சமயம் இறக்கவும். இந்த களியுடன் மோர் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
15 கோதுமை ரொட்டி தேவையானவை: கோதுமை மாவு, சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது)- தலா 1 கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை அரை கப், வாழை இலை - 1, காய்ந்தமிளகாய் - 3, தனியா உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 3 டீஸ்பூன், செய்முறை: தனியா, காய்ந்தமிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைக்கவும். இத்துடன் நறுக்கிய சின்னவெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து, வெந்நீர் ஊற்றி, உப்பு, நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து தளர்வாக பிசையவும். பின்னர் அதை சிறிய உருண்டையாக உருட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, வட்டமாக தட்டவும். பின்னர் அதை சூடான தவாவில் போட்டு, இலையை எடுத்து விடவும். ரொட்டியைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவைத்து எடுக்கவும். கத்தரிக்காய் சட்னியுடன் பரிமாறவும்.
16 குழாய் புட்டு தேவையானவை: பச்சரிசி - 1 கப், தேங்காய்த்துருவல் -அரை கப் சர்க்கரை, உப்பு - சிறிதளவு. செய்முறை: பச்சரிசியை தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். பின்னர் அதை சுத்தமான துணியில் பரப்பி, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின்னர் அதை சலித்து, வெறும் வாணலியில் போட்டு, லேசாக வறுத்து ஆறவைக்கவும். இந்த மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசறவும். இந்த மாவை பிசறிய பிறகு உள்ளங்கையில் வைத்து லேசாகப் பிடித்தால் பிடி படவேண்டும். அதுதான் சரியான பதம். பின்னர் அதனுடன் சிறிதளவு தேங்காய்த்துருவல், சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். புட்டு குழலில் முதலில் சிறிதளவு தேங்காய்த்துருவலைப் போட்டு அதன் பின் கலந்து வைத்துள்ள மாவை பாதியளவு நிரப்பவும். அதன் மேல் மறுபடியும் சிறிது தேங்காய்த்துருவல் போடவும். இப்படியே தேங்காய்த்துருவலையும் மாவையும் மாற்றி மாற்றி குழலின் மேல் பாகம் வரை நிரப்பி, குழலை மூடி வேகவைக்கவும். நன்றாக வெந்து, துவாரங்களில் ஆவி வரும் சமயம் இறக்கவும். கொண்டைக்கடலை குழம்புடன் சூடாக பரிமாறவும்.
17 மாங்காய் வற்றல் குழம்பு தேவையானவை: மாங்காய் வற்றல் - 10, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், தனியா, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய் தலா 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு -தேவையான அளவு. செய்முறை: மாங்காய் வற்றலை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து வடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய் சேர்த்து வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். புளியுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அரைத்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்து, மாங்காய் வற்றலை போடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் கொட்டி, கலந்து பரிமாறவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...