முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

www.kalaireal360.xyz

May All Your Dreams Come True Mug - Aesthetic Minimalist Coffee Cup

  https://www.zazzle.com/may_all_your_dreams_come_true_mug_specialty_mug-256995097164797468 May All Your Dreams Come True Mug - Aesthetic Minimalist Coffee Cup

பனீர் கசடிலா &பனீர் குருமா&பனீர் இடியப்பம் 

 பனீர் கசடிலா   தேவையானவை: பரோட்டா 4. பனீர் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், சின்ன சைஸ் தக்காளி - தலா ஒன்று, குடைமிளகாய் பாதியளவு, பூண்டு - 2, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டீஸ்பூன், சீஸ் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் சேர்க்காமல் பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு, முக்கால் பதத்திற்கு சுட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, உரித்த பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமானதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பனீர் துருவலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். கசடிலா செய்முறை: தோசைக்கல்லில் பரோட்டாவை போட்டு, அதன் மீது பனீர் கலவையை வைத்து, 2 டீஸ்பூன் சீஸை தூவவும். பின்னர் அதை மற்றொரு பரோட்டாவால் மூடி, சுற்றிலும் எண்ணெய் விட்ட...

பனீர் பராத்தா &பனீர் பட்டர் மசாலா&பனீர் பிரியாணி

 பனீர் பராத்தா  தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், எண்ணெய் தேவையான அளவு. ஒரு டீஸ்பூன், உப்புபூரணம் செய்ய: பனீர் - 100 கிராம், பச்சைமிளகாய் - 3, சீரகத்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன், இஞ்சி - அரை இன்ச், கரம் மசாலா, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவுடன், எண்ணெய்,உப்பு சேர்த்து கலந்து,தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். ஒரு பாத்திரத்தில், பனீரை துருவி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்தால் 'பூரணம்' தயார். பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவு எடுத்து 'கிண்ணம் போல் செய்து, சிறிதளவு பூரணத்தை வைத்து மூடி, சற்றே தடிமனாகத் திரட்டி, காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் சற்று பொன்னிறமானதும் எடுக்கவும்.  பனீர் பட்டர் மசாலா  தேவையானவை: பனீர் - 200 கிராம்,வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 3/4...

காராச்சேவு & ஓமப்பொடி & தேங்காய்ப்பால் தேன்குழல்

 காராச்சேவு தேவையான பொருட்கள்: பச்சரிசிமாவு-4 கப், வறுத்து அரைத்த உளுத்தம் பகுப்பு: மாவு-ஒரு கட், வெண்ணெய்-50 கிராம், கரகரப்பாக பொடித்த சீரகம், மிளகுப்பொடி-தலா ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எண்ணெய்-பொரிக்க. செய்முறை: மேற்கண்ட அனைத்தையும் நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைக்கவும். காய்ந்த எண்ணெயின் மேல் காராச்சேவு அச்சைப் பிடித்துக் கொண்டு, மாவை வைத்து அழுந்தத் தேய்த்தால் நீளநீளமாக காராச்சேவு எண்ணெயில் விழும். வெந்ததும் நுரை அடங்கும். அப்போது எடுத்து விடுங்கள். (டைரக்டாக எண்ணெயில்தான் தேய்த்துவிடவேண்டும். தேய்த்துவைத்துப் பின் எண்ணெயில் போட்டால் ஹார்டாக இருக்கும்.) ஓமப்பொடி தேவையான பொருட்கள்: கடலைமாவு-4கப், பச்சரிசிமாவு-ஒரு கப், மிளகாய்த்தூள்- டீஸ்பூன், வெண்ணெய் (அ) வனஸ்பதி-ஒரு டீஸ்பூன், ஓமம் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு. செய்முறை: ஓமத்தை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அகலமான தட்டில் கடலைமாவையும், பச்சரிசிமாவையும் கலந்து ஓமத்தண்ணீர், வெண்ணெய், உப்பு கலந்து தண்ணீர் தெளித்துப் பி...

கார்ன் மிக்ஸர் & ஸ்பெஷல் மிக்ஸர்  & முள்ளு முறுக்கு

 கார்ன் மிக்ஸர் தேவையான பொருட்கள்: மக்காச்சோளப்பொரி./கிலோ, சர்க்கரை-ஒரு டீஸ்பூன், திராட்சை-100 கிராம், முந்திரி-100 கிராம், ஓமப்பொடி-2கப், காரப்பொடி-2 டீஸ்பூன், உப்பு-டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: மக்காச்சோளப் பொரியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பின் இதோடு மேற்கண்ட மற்றவைகளையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்கி, காற்று போகாத டப்பாவில் அடைத்துக் கொள்ளவும். மக்காச்சோளப் பொரி எண்ணெயில் போட்டவுடனே பொரிந்துவிடும். உடனே எடுக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிவந்துபோய்விடும ஸ்பெஷல் மிக்ஸர்  தேவையான பொருட்கள்: காராபூந்தி-4 கப், வறுத்த முந்திரிப் பருப்பு-100 கிராம், வறுத்த பொட்டுக்கடலை-100 கிராம். ஓமப்பொடி-4 கப், வறுத்த வேர்க்கடலை-1/4கிலோ, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை (மிளகு (அ) மிளகாய்) காரப்பொடி-2 டீஸ்பூன், வறுத்த அவல்-100 கிராம், பொரித்த கறிவேப்பிலை-2 பிடி, உப்பு-1/4டீஸ்பூன். செய்முறை: வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட அனைத்தையும் கொட்டி, கைபடாமல் பத்திரப்படுத்தவும். குலுக்கி காற்றுப்புகாத டப்பாவில் அடை...

காசி அல்வா & தீல் பஹார் & முந்திரி & தேன்குழல்

 காசி அல்வா தேவையான பொருட்கள்: துருவிய வெள்ளைப் பூசணி-2 கப், சர்க்கரை ஒரு கப், நெய்+கப், கோவா-2 டீஸ்பூன், ஆரஞ்ச் கலர்-ஒரு சிட்டிகை, வெள்ளரி விதை-2 டீஸ்பூன். செய்முறை: பூசணித் துருவலை நன்றாக நீர் வடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் நெய்விட்டு, பூசணித் துருவல் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். கலர் சேர்த்து, திக்காகும் வரை நெய் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும். நெய் கக்கும் போது கோவா சேர்த்து கிளறி இறக்கி வெள்ளரிவிதைகளைத் தூவவும், வதங்கின ஈரப்பசையுள்ள பூசணித் துருவலில் சர்க்கரை சேர்த்தாலே சர்க்கரை கரைந்து பதமாகும். தீல் பஹார் பத்து நாட்களுக்கு முன்பு திட்டமிட வேண்டிய ஸ்வீட் இது. காரணம், இதற்குத் தேவையான வே வாட்டர்தான். பாலைக் காய்ச்சும் போதே, தயிர் ஒரு துளி விட்டால் பால் திரிந்துவிடும். திரிந்தபின் வடிகட்டி எடுக்கும் தண்ணீர்தான் வே வாட்டர். இந்த வே வாட்டர் பத்துநாள் புளித்தால்தான், தில்பஹார் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பால்-ஒரு லிட்டர், வே வாட்டர்-ஒரு கப், சர்க்கரை-2 கப், தண்ணீர்-4 கப். செய்முறை: பாத்திரத்தில் பால் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கா...

ஹோட்டல் சுவையில் 3 வகை ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள்! சோயா சங்க் புலாவ், உருளைக்கிழங்கு சாதம், கேபேஜ் புலாவ் செய்வது எப்படி?"

 சோயா சங்க் புலாவ் தேவையானவை: சோயா சங்க்-1 கப், தயிர்-1/4 கப், மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள்-1 டீஸ்பூன், சால்ட்-1/4 டீஸ்பூன், பாசுமதி அரிசி-1 கப், எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1 (நறுக்கியது), பட்டை-1, கிராம்பு-2, சீரகம்-1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, தக்காளி-1 ப.மிளகாய்-2, இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன், கரம் மசாலா-1 டீஸ்பூன். செய்முறை: சோயாவை 15 நிமிடம் கொதிநீரில் ஊறவிட்டு பிழிந்து எடுக்கவும். அதில் தயிர் 1/4 கப், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிசறி 20 நிமிடம் ஊறவிடவும். பிரஷர் பேனில் எண்ணெய், நெய் விட்டு மசாலா சாமான், சீரகம், வெங்காயம் வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது பிசறி வைத்த சோயாவை சேர்த்து கிளறி பின் 20 நிமிடம் ஊறவைத்த பாசுமதி அரிசியைச் சேர்க்கவும். 1 1/2 கப் நீர் விட்டு 2 விசில் வரும் வரை வேகவிடவும். மல்லி இலை தூவவும்.சோயா சங்க் புலாவ் ரெடி. உருளைக் கிழங்கு சாதம் தேவையானவை: கடுகு-1 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், சோம்பு-1 டீஸ்பூன், கிராம்பு-2, ஏலம்-2, பிரிஞ்சி இலை-1, உருளைக் கிழங்கு-2 (மீடியம் சைஸ்), பொன்னி அரிசி-...

மதிய உணவிற்கு 3 வகை ஆரோக்கியமான சாதம்! ஹோட்டல் சுவையில் சாம்பார் சாதம், வெந்தய புலாவ் & வெஜிடபிள் புலாவ் செய்முறை

 சாம்பார் சாதம் தேவையானவை: ப.அரிசி, துவரம்பருப்பு, பீன்ஸ், கேரட், சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய், பச்சை பட்டாணி, சாம்பார் பொடி, உப்பு, எண்ணெய், நெய், முந்திரி, கறிவேப்பிலை, புளி, கடுகு. செய்முறை: அரிசி-1 கப், பருப்பு 1/2 கப். குக்கரில் வேக விடவும் (தனித்தனியாக) புளி கரைத்து காய்களை வதக்கி சாம்பார் செய்யவும். பிறகு வெந்த சாதத்தில் சாம்பார் ஊற்றி நன்கு கிளறி, சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க விடவும். அல்லது ரைஸ் குக்கரில் வைக்கலாம். நெய்யில் கடுகு, முந்திரி தாளிக்கவும். சாம்பார் செய்வதற்கு சாம்பார் பொடி தயாரித்து போட்டால், சுவை கூடுதலாக இருக்கும். சாம்பார் பொடி: காய்ந்த மிளகாய்-7 (அ) 8, தனியா-1 டேபிள் ஸ்பூன், மிளகு-1/2 டீஸ்பூன், சீரகம்-1/2 டீஸ்பூன், க.பருப்பு-1 டேபிள் ஸ்பூன், வெந்தயம்-1/4 டீஸ்பூன், பெருங்காயம், எண்ணெய்யில் வதக்கிப் பொடி செய்து போடவும். இதற்கு பொரியல், சிப்ஸ், வடாம் நன்றாக இருக்கும். வெந்தய புலாவ் தேவையானவை: தண்ணீர்-1 கப், வெந்தயக்கீரை-பெரிய கட்டு 1, பாசுமதி அரிசி-1/2 கப், நெய், பனீர், சீரகம்-1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-1, மிளகு, பட்டை-சிறிது, கிராம்ப...