முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

www.kalaireal360.xyz

May All Your Dreams Come True Mug - Aesthetic Minimalist Coffee Cup

  https://www.zazzle.com/may_all_your_dreams_come_true_mug_specialty_mug-256995097164797468 May All Your Dreams Come True Mug - Aesthetic Minimalist Coffee Cup

பனீர்  வெஜ் சாலட்  & பனீர் மசாலா பப்பட் & பனீர் ஸ்டிக்ஸ் & பிரட் பனீர் ரோல் 

 பனீர் வெஜ் சாலட் பனீர்  வெஜ் சாலட்  தேவையானவை: துருவிய பனீர், கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/4 கப், பச்சை மிளகாய் -2 (இரண்டாக கீறிக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 1.5 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து பரிமாறவும் . பனீர் மசாலா பப்பட் தேவையானவை: மிளகு அப்பளம் - 2, துருவிய பனீர், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய் - தலா 1 கப் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள் தலா 1/4 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: அடுப்பில் தோசைக்கல்லை நன்றாக சூடுபடுத்தி, மிளகு அப்பளத்தை போட்டு, இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு சுட்டு எடுக்கவும். மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சுட்ட மிளகு அப்பளம் மீது பரப்பி வைத்து, ஏதாவதொரு சூப்புடன் பரிமாறவும். பனீர் ஸ்டிக்ஸ் தேவையானவை: நீளமாக மெலிதாக நறுக்கிய பனீர் - 100 கிராம், மைதா 1/2 டேபிள் ஸ்பூ...

வீட்டிலேயே பனீர் தயாரிப்பது எப்படி? & பனீர் கட்லெட் & பனீர் கீர்

 வீட்டிலேயே பனீர் தயாரிப்பது எப்படி? தேவையானவை: பால் - 1 லிட்டர், எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன், குளிர்ந்த நீர் - சிறிதளவு. செய்முறை பாலை அடுப்பில் வைத்து, அது நன்கு கொதி வரும்போது எலுமிச்சைச்சாறு சேர்த்து, கரண்டியால் நன்றாகக் கலந்து விடவும். பால் முழுமையாகத் திரிந்து வந்தவுடன், அடுப்பை அணைக்க சற்று பெரிய வடிகட்டியில், சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டு திரிந்த பாலை அதில் ஊற்றவும். துண்ணீர் நன்றாக வடிந்தவுடன், அதில் குளிர்ந்த நீரை சிறிதளவு ஊற்றி, ஒரு ஸ்பூனால் நன்றாகக் கிளரி விடவும். ஊற்றிய தண்ணீர் வடிந்தவுடன், துணியை அப்படியே இறுக்கி உள்ள நீரை சுத்தமாக வடித்துவிடவும். பிறகு அதனை அப்படியே மூட்டை போல கட்டவும். சற்று கனமான தோசைக்கல் அல்லது ஏதேனும் கனமான பொருளை அதன்மீது வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து எடுத்து, விருப்பமான அளவில் பனீரை நறுக்கிப் பயன்படுத்தவும். பனீர் கட்லெட் தேவையானவை: துருவிய பனீர் - 100 கிராம், வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - 2, பிரெட் க்ரம்ஸ் - 1/4 கப், கார்ன் ஃப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன், துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை -சிறிதளவு காய்ந்த...

அவகாடோ பாஸ்தா &லேயர் பாஸ்தா& பிரின்ஜால் பாஸ்தா

 அவகாடோ பாஸ்தா தேவையானவை: கோதுமை பாஸ்தா, நறுக்கிய பசலைக்கீரை தலா 1 கப், ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள் - தலா 2 ஸ்பூன், பழுத்த அவகாடோ 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1/2 கப், பூண்டு பற்கள் - 4, உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, % ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் நீரை வடித்து, குளிர்ந்த நீரில் அலசவும். அவகாடோவை நறுக்கி மிக்ஸியில் போடவும். இதனுடன் பசலைக்கீரை, கொத்துமல்லித்தழை, பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து விழுதாக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து கிளறி, வெந்த பாஸ்தாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். லேயர் பாஸ்தா தேவையானவை: அளவில் சிறியதாக இருக்கும் பாஸ்தா - 2 கப், புதினா, தயி - 16 கப், வெள்ளை மிளகுத்தூள் - 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சர்க்கரை % ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய் தலா 2, ஆலிவ் எண்ணெய், சீஸ் துருவல் - தலா 2 ஸ்பூன், ஆரிகானோ - 1 1/2 ஸ்பூன், வெண்ணெய். உப்பு - ருசிக்கேற்ப.  செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து நீரை வடித்து, வெந்ததை மூன்று சம பாகங்களாக பிரிக்கவும். 1) புதினா, பச்சைமிளக...

பாசிப்பருப்பு கட்லட்&கொண்டைக்கடலை கட்லட்

 பாசிப்பருப்பு கட்லட் தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு 100 கிராம், தேங்காய்த்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி -தலா சிறிதளவு, வெங்காயம் ஒன்று, கேரட் துருவல் (அ) முட்டைக்கோஸ் துருவல் - அரை கப், உப்பு, ரொட்டித்தூள் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தலா சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் கேரட் துருவலை வதக்கி, உப்பு, கொத்துமல்லித்தழை, அரைத்த பாசிப்பருப்பு விழுது, மசித்த உருளை சேர்த்து கிளறி இறக்கி, ஆறியதும் வட்டமாக தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து, சூடான தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். கொண்டைக்கடலை கட்லட் தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, உருளைக...

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

மட்டன் மொஹலாய் பிரியாணி &முட்டைஇடியாப்ப பிரியாணி&ஆம்பூர் சிக்கன் பிரியாணி

 மட்டன் மொஹலாய் பிரியாணி தேவையான பொருட்கள்: மட்டன் - / கிலோ, பாஸ்மதி அரிசிய கிலோ, இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள்-1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (நறுக்கியது)-4, தக்காளி-3, பச்சைமிளகாய் 6, பட்டை, லவங்கம் - தலா 2, நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணொய் -3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூன் - % டீஸ்பூன், மிளகாய்ப் பொடி-1டீஸ்பூன், தயிர் -1 கப், மல்லி இலை - சிறிதளவு, ஃபுட் கலர் - தேவைக்கேற்ப, கசகசா - ஒரு டீஸ்பூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மட்டனைக் கழுவி சுத்தம் செய்யவும் அரிசியை களைந்து தண்ணீரை இறுத்துவிட்டு 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு வதக்கவும் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் இதனுடன் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மட்டன் துண்டுகளையும் போட்டு வதக்கவும். மட்டன் துண்டுகள் வேக ஆரம்பிக்கும் போது லேசாக வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கும் அப்போது இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கசகசாவை அரைத்து, தயிருடன் சேர்த்துக் கலக்கவும். இதை கொதிக்க வைத்த இந்த மட்...

இடியாப்ப கைமா தம் பிரியாணி&சிக்கன் பிரியாணி&இறால் பிரியாணி

 இடியாப்ப கைமா தம் பிரியாணி  தேவையான பொருட்கள்: இடியாப்பம் -1/2கி,கைமா (மட்டன்) கி, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் (நீளவாக்கில் கீறியது)- 4. பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 1, கரம்மசாலா -/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி - சிறிதளவு, எலுமிச்சை பாதி மூடி, கறிவேப்பிலை - தாளிக்க,உப்பு- தேவையான அளவு. செய்முறை: இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கரம் மசாலா பவுடர், வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கிளறி அதனுடன் கைமா கறியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். கலவை நன்கு கொதித்ததும், உதிர்த்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.  சிக்கன் பிரியாணி  தேவையான பொருட்கள்:  பாஸ்மதி அரிசி 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, தக்காளி - % க...