ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
பிரட் பீட்ஸா தேலையானவை. பிரட் துண்டுகள் - 8. ஆரிகானோ -துருவின பனீர், வெண்ணெய், தக்காளி சாஸ் - தலா 2 ஸ்பூன், துருவின சீஸ் - 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிகப்பொடியாக அரிந்த பச்சைமிளகாய் - 2. செய்முறை: துருவின பனீர், தக்காளி சாஸ், உப்பு, ஆரிகானோ, பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும். பிரட்டில், வெண்ணெய் தடவவும், அதன்மேல், பனீர் கலவை தடவவும், துருவின சீஸ் சேர்க்கவும். அதன்மேல் மற்றொரு பிரட் வைத்து, அதன்மேல் ஒரு கனமான பாத்திரம் வைத்து, அடுப்பை சிம்மில் வைக்கவும், கீழ் பாகம் சிவந்ததும், பாத்திரத்தை எடுத்து, மறுபுறம் திருப்பி, வெந்ததும் பரிமாறவும். (பிரட்டின் மேல், அப்பளக்குழவியால் தேய்த்தால், பிரட் மெலிதாக ஆகும்.) ஃப்ரூட் சாண்ட்விச்ஃப்ரூட் சான்ட்விச் தேவையானவை: சாண்ட்விச் பிரட் துண்டுகள் - 10, அளிந்த பழத்துண்டுகள் (மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, தர்பூசணி) - தலா 4 கப், வெண்ணெய் - 1 ஸ்பூன், செய்முறை: பழத்துண்டுகள் 10 எடுத்து வைத்து, மீதமானதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். 2 பிரட் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். மீதமான பிரட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். அரைத்து வைத்த ...