டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க. சீரகம். கருவேப்பிலை. கடுகு .2 வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள் எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்
கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான். குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய் 10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.