குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...
கேசரி போளி 100 கிராம் ரவை சக்கரை-ஒன்றரை கப், - 130 மில்லி கோரிப்பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கோரிப்டவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய்யில் வறுத்து, ஒரு பங்கு ரவைக்கு இருபங்கு அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி, வறுத்த ரவையைத் தூவி கிளறவும். இதனுடன் கேசரிப்பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும், பிசைந்த மைதாமாவை சிறிய சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய் தடவிய வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து, வட்டமாகத் தட்டி, ரெடியாக வைத்துள்ள கேசரியை இதனுள் சிறிது வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும். இந்த போளிகளை நெய் தடவிய தவாவில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் சர்க்கரைவள்ளி கிழங்கு சுகியன் தேவையானவை: மைதாமாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு 4. பொடித்த வெல்லம் 100 கிராம். எண்ணெய் - 250 மில்லி, ஏலக்காய்தூள் சிறிதளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் ...